மேற்கு தொடர்ச்சி மற்றும் தென் உட்புற கர்நாடக பகுதிகளில் மேகங…


மேற்கு தொடர்ச்சி மற்றும் தென் உட்புற கர்நாடக பகுதிகளில் மேகங்களை பார்க்க முடிகிறது…வரை படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள இடங்களில் மழை பெய்தோ அல்லது பெய்யவோ உள்ளது…பெங்களூரு ,கோலார் மேகங்கள் மேற்கு கிழக்காக நகர்ந்தால் நம் VTC பகுதியின் செங்கம், நாற்றம்பள்ளி, கந்திலி, திருப்பத்தூர வாணியம்பாடி, ஆலங்காயம், ஏலகிரி மற்றும் ஜவ்வாது மலை தொடர்களில் மழை வர வாய்ப்புகள் அதிகமாகும்..பார்ப்போம் காற்றின் திசை எப்படி அமைகிறது என்று…

கடந்த 24 மணி நேர வெப்பநிலை மற்றும் மழையளவு கீழ் அட்டவணையில் இணைக்க பெற்றுள்ளது…

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை:-
ஈரோட்டில் 42 ℃ ஆக பதிவானது..
——
தமிழ்நாட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை(சமவெளியில் ):-

வேலூர் மாவட்ட திருப்பத்தூரில் 21 ℃ ஆக பதிவானது..

VTC மண்டலத்தில் அதிகபட்ச வெப்பநிலை :-

திருவண்ணாமலையில் 40 ℃ ஆக பதிவானது.
——
VTC மண்டலத்தின் குறைந்த பட்ச வெப்பநிலை (சமவெளியில்) :-

திருப்பத்தூர்- 21 ℃
——-
VTC மண்டலத்தின் குறைந்த பட்ச வெப்பநிலை ( ஒட்டுமொத்தமாக) :-

ஏலகிரி மலை-19 டிகிரி செல்சியஸ்