15-04-2018 நேரம் இரவு 7:00 மணி மாலை முதல் சேலம் உட்பட சேலம் …


15-04-2018 நேரம் இரவு 7:00 மணி மாலை முதல் சேலம் உட்பட சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் பல பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வந்தன சேலம் உட்பட சேலம் மாவட்டத்தின் சில இடங்களிலும் நாமக்கல் மாவட்டத்தின் பல இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பதிவாகியிருக்க வேண்டும் மேலும் தற்பொழுது கேரள மாநிலம் பாலக்காடு , அட்டப்பாடி , மன்னார்காட் , மலப்புரம் ,திருச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கணமழை பதிவாகி வருகிறது இதன் தாக்கத்தால் கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது நீலகிரி மாவட்டத்திலும் இன்று ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புகள் உண்டு.தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று இதன் பிறகு மழைக்கு வாய்ப்புகள் உருவாகும் பட்சத்தில் நானே பதிவிடுகிறேன் சற்று முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மழை மேகங்கள் பதிவாகி வந்தன தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் காற்று வீசி வருவதால் இன்று மீண்டும் திருச்செங்கோடு பகுதிக்கு இதன் பிறகு மழை வாய்ப்புகள் உருவாகலாம் ஈரோடு மாவட்டத்திலும் இன்று மீண்டும் ஓரிரு இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

நிகழ்நேரத்தில் மழைக்கான மேலும் பல புதிய வாய்ப்புகளுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.