15-04-2018 நேரம் பிற்பகல் 3:00 மணி நான் இந்த பதிவுடன் இணைத்த…


15-04-2018 நேரம் பிற்பகல் 3:00 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் ராடார் படங்கள் இன்று பிற்பகல் 2:40 மணியளவில் பதிவானவை அதன்படி நான் இதற்கு முன்பு மழைக்கான வாய்ப்புகள் தொடர்பான பதிவில் பதிவிட்டு இருந்தது போல நாமக்கல் மாவட்டத்தில் நண்பகளுக்கு பிறகு ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாக தொடங்கின குறிப்பாக திருச்செங்கோடு அருகே உள்ள பகுதிகளில் தற்போதும் திருச்செங்கோடு அருகே மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்பொழுது ஆலப்பாளையம் ,வெப்படை உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தை ஒட்டியுள்ள நாமக்கல் மாவட்ட பகுதிகளில் மழை பதிவாகி வர வேண்டும் இன்னும் சற்று நேரத்தில் ஈரோடு நகர பகுதியிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு மேலும் பவானி பகுதியிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

மேலும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள பெரம்பலூர் மாவட்ட பகுதிகளிலும் நீண்ட நேரமாக மழை மேகங்கள் பதிவாகி வந்ததை ராடாரின் உதவியுடன் அறிய முடிந்தது தற்பொழுது வேப்பூர் , பெருமாத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் மழை பதிவாகி வரலாம் மேலும் தற்பொழுது சேலம் மாவட்டத்திலும் கனவாய்ப்புத்தூர் , டேனிஷ்பேட்டை மற்றும் கடையம்பட்டி அருகே உள்ள பகுதிகளில் தற்பொழுது மழை பதிவாகி வரலாம்.

மேலும் தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டங்களை கடந்து திருச்சி மாவட்டம் மண்டியூர் , குண்டூர் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்று திருச்சி மாநகரில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புகள் உண்டு குறிப்பாக தென் புற -நகர் பகுதிகளில் மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள இடங்களிலும் இன்னும் சற்று நேரத்தில் மழைக்கு வாய்ப்புகள் உண்டு.மேலும் சேலம் மாவட்டம் அருகிலும் காற்று வட மேற்காக வீசி வருவதால் அடுத்த சில நிமிடங்களில் தர்மபுரி அருகே உள்ள தர்மபுரி மாவட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உண்டு சில மணி நேரங்களுக்கு முன்பு நெல்லை உட்பட நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாகி வந்தன.

நிகழ் நேரத்தில் மழைக்கான புதிய வாய்ப்புகளுடன் சில மணிநேரங்களில் மீண்டும் பதிவிடுகிறேன்.