16-04-2018 நேரம் இரவு 11:15 மணி இன்னும் சற்று நேரத்தில் நீலக…


16-04-2018 நேரம் இரவு 11:15 மணி இன்னும் சற்று நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு கர்நாடக மாநிலம் மைசூரு பகுதிகளை கடந்து தற்பொழுது பந்திப்பூர் புலிகள் சரணாலயம் பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் ராடாரில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன தற்பொழுது பந்திப்பூர் புலிகள் சரணலாய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வர வேண்டும் இன்னும் சற்று நேரத்தில் முதுமலை தேசிய பூங்கா வழியாக அந்த மழை மேகங்கள் நீலகிரி மாவட்டத்தினுள் நுழைய முற்படலாம்.

17-04-2018 ஆகிய நாளை சென்னை , புதுச்சேரி உட்பட திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,சென்னை ,புதுச்சேரி ,கடலூர் ,நாகை ,காரைக்கால் ,திருவாரூர் ,தஞ்சை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களில் தற்போது நிலவி வரும் பகல் நேர வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் ஆங்காங்கே 1° செல்சியஸ் வரையில் வெப்பநிலை உயர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது மேலும் விருத்தாச்சலம் ,உளுந்தூர்பேட்டை ,கள்ளக்குறிச்சி போன்ற கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் உட் பகுதிகளில் 1° முதல் 2° செல்சியஸ் வரையில் நாளை பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அதேபோல திருவண்ணாமலை , வேலூர் , சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,பெரம்பலூர் ,அரியலூர் ,திருச்சி உள்ளிட்ட வட உள் மாவட்டங்களிலும் அநேக இடங்களில் பகல் நேர வெப்பநிலையானது நாளை அதிகரித்தே பதிவாகலாம் திண்டுக்கல் , புதுக்கோட்டை ,சிவகங்கை உட்பட தென் மாவட்டங்களிலும் நாளை சில இடங்களில் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரிப்பு உணரப்படலாம்.மேற்கு உள் மாவட்டங்கள் குறித்து நான் பதிவிட வேண்டிய அவசியமே இல்லை எப்பொழுதும் போலவே நாளையும் பகல் நேர வெப்பநிலையானது உயர்ந்தே இருக்கும்.

17-04-2018 ஆகிய நாளை கரூர் , முசிறி ,தாராபுரம் ,வெள்ளாக்கோயில் ,அரவாக்குறிச்சி உள்ளிட்ட கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட பகுதிகளில் சில இடங்களில் கிட்டத்தட்ட 102° (39° C) முதல் 106° (41° C) பாரன்ஹீட் வரையில் பகல் நேர வெப்பநிலையானது பதிவாகலாம் மேலும் திருவண்ணாமலை , திருச்சி மாவட்டம் துறையூர் , மணப்பாறை போன்ற பகுதிகளிலும் , சேலம் ,கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ,வேடசந்தூர் உள்ளிட்ட சில திண்டுக்கல் மாவட்ட பகுதிகளிலும் கிட்டத்தட்ட 101° பாரன்ஹீட் வரையில் வெப்பம் பதிவாகலாம் மேலும் திருச்சி , வேலூர் ,ஆரணி ,திருப்பதூர் , மதுரை , போளூர் ,செஞ்சி ,கள்ளக்குறிச்சி உட்பட நாளை வட -உள் மற்றும் வட மாவட்டங்களின் பல இடங்களிலும் 100° பாரன்ஹீடுக்கும் அதிகமான அளவு வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகலாம்.

வானிலை தொடர்பான மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன் அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.