16-04-2018 நேரம் இரவு 7:35 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக…


16-04-2018 நேரம் இரவு 7:35 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் ராடார் படங்கள் இன்று இரவு 7:10 மணி வாக்கில் பதிவானது அதன்படி தற்பொழுது திண்டுக்கல் , தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதன்படி தற்பொழுது தேனி மாவட்டம் பெரியகுளம் ,பொடிநாயக்கனூர் மற்றும் அகமலை காடுகள் பகுதிகளில் நல்ல இடியுடன் கூடிய மழை பதிவாகி வர வேண்டும் இன்னும் சற்று நேரத்தில் தேனி பகுதிகளிலும் மழை பதிவாகலாம் மேலும் தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்பொழுது ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகி வரலாம் இதே வானிலை தொடர்ந்தாள் அடுத்து வரக்கூடிய சில நிமிடங்களில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தின் தென் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் நீண்ட நேரமாக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்பொழுதும் அங்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பதிவாகி வர வேண்டும்.

16-04-2018 இன்று மாலை 5:30 மணிக்கு பதிவான இன்றைய அதிகபட்ச வெப்பநிலை அளவுகளின் படி கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 103° (39.2° C ) பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது அதே போல திருத்தணியில் 102° (39° C ) பாரன்ஹீட் வெப்பமும் மேலும் திருச்சி , வேலூர் ,சேலம் ,தர்மபுரி ,மதுரை ,நாமக்கல் பகுதிகளில் கிட்டத்தட்ட 100° பாரன்ஹீட்க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவானது இவை வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டு உள்ள தகவல் இவைகள் அல்லாமல் காலையில் நான் பதிவிட்டு இருந்தது போல காஞ்சிபுரம் , ஈரோடு , பெரம்பலூர் , திருவண்ணாமலை உட்பட நான் மேற்குறிய மாவட்டம் அனைத்திலும் பல இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவானது.

வானிலை தொடர்பான மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.