16-04-2018 நேரம் மாலை 4:50 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக…


16-04-2018 நேரம் மாலை 4:50 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் சென்னை வானிலை ஆய்வு மைய ராடார் படமானது இன்று மாலை 4:20 மணி வாக்கில் பதிவானது அதன்படி தற்பொழுது விருதுநகர் , நாமக்கல் , புதுக்கோட்டை ,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்று பிற்பகல் முதலே ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் இளந்தக்கரை பகுதிகளுக்கு அருகே உருவான மழை மேகங்கள் மானாமதுரை உட்பட சிவகங்கை மாவட்டத்தின் சில இடங்களில் மழை பொழிவை ஏற்படுத்தின தற்பொழுது விருதுநகர் மாவட்டம் வீரசோழன் ,நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட அருப்புக்கோட்டை அருகே உள்ள விருதுநகர் மாவட்ட பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்தி வர வேண்டும் இன்னும் சற்று நேரத்தில் மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் மேலும் இன்று பிற்பகலில் கோவில்பட்டி அருகே உருவான மழை மேகங்கள் தற்பொழுது திருநெல்வேலி மாவட்டத்தின் வட பகுதிகளில் ஆங்காங்கே மழை பொழிவை ஏற்படுத்தி வர வேண்டும் இன்னும் சற்று நேரத்தில் ஊத்துமலை அருகே உள்ள பகுதிகளிலும் நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் அதே போல விருதுநகர் மாவட்டத்திலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு மேலும் இன்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் குமாரமங்கலம் அருகே உள்ள பகுதிகளில் மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் ஈரோடு உட்பட ஈரோடு மாவட்டத்திலும் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதேபோல சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் ஆங்காங்கே சிறிய மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன.

நிகழ்நேரத்தில் மழைக்கான பல புதிய வாய்ப்புகளுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.